பெண்கள் பூப்பந்தாட்டப் போட்டியில் தேசியக்கல்லூரி முதலிடம்
திருச்சி, ஜன.12 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெண்கள் பூப்பந்தாட்டப் போட்டி ஜன. 10, 11 ஆம் தேதிகளில் மன்னார்குடி எஸ்.டி.இ.டி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற 9 மாவட்டங்களிலிருந்து சுமார் 17 கல்லூரி பெண்கள் அணியினர் பங்கேற்றனர். இப்போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி பெண்கள் அணியினர் முதல் இடத்யும்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பெண்கள் அணியினர் 2ஆம் இடமும் பெற்றன. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் விளையாட்டுக்குழு செயலாளர் காளிதாசன் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், சான்றுகள், பதக்கங்களை வழங்கினர்.
