லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சணமங்கலத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெண்ணாகரத்தைச் சேர்ந்த அசின் மகன் சித்திக் (19), அதே பகுதியை சேர்ந்த அப்துல் பாசல் (25) அரியலூரை சேர்ந்த அமீர்ஜான் பாஷா மகன் இஸ்மாயில்(29) ஆகியோர் நேற்று பெரம்பலூர் இருந்து திருச்சிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். காரை பெண்ணாடத்தைச சேர்ந்த சையத் சலாம் (26) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சணமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரி மீது எதிர்பாராதமாக பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சித்திக், இஸ்மாயில் அப்துல் பாசல் மற்றும் கார் டிரைவர் சையத் சலாம் உட்பட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர்.விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.