கார் மோதி விறகு வியாபாரி உயிரிழப்பு
மணப்பாறை அருகே உள்ள கல்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல் ( 65).விறகு வியாபாரியான இவர் நேற்று மதியம் கல்பட்டி அருகே பிரிவு சாலையை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார். மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.