மாசில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

0 455
Stalin trichy visit

திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் பல்வேறு பொதுநலச்சங்கங்கள் இணைந்து மாசு இல்லாத, விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த கோர்ட்டு எதிரே நடத்தினர்.

குழந்தைகள் பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பஸ் பயணிகள், இருச்சக்கர வாகன ஓட்டிகளுக்கும் வினியோகிக்கப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் சீனிவாச பிரசாத்தின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தீயணைப்புத்துறை கோட்ட உதவி அலுவலர் கருணாகரன் தொடங்கி வைத்தார். பல்வேறு சமூக நல அமைப்பை சேர்ந்த சங்கர், மோகன், நடிகர் தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.