கொள்ளிடக்கரையில் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை

0 399
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் சஞ்சீவி ஆஞ்சநேயர் அறக்கட்டளை சார்பில் கொள்ளிடக்கரையில் சுமார் 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக சுமார் 10 அடி ஆழத்தில் குழி தோண்டி கான்கிரீட் அடித்தளம் மற்றும் பீடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்த சூழலில் ஸ்ரீரங்கம் மேலூருக்கு 37 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கொண்டு வரப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் சிலையுடன், அங்குச் சிறிய அளவில் கோவிலும் அமைக்கப்பட்டு சிலைக்கு, பீடம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

இந்த ஆலயத்தில் நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர், சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அந்த சிலைகள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுவிட்டன. பிரம்மாண்ட அனுமர் சிலை மட்டுமே கொண்டு வரவேண்டியிருந்த நிலையில் அதுவும் வந்தடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.