பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக கிண்டல் செய்தவர் போக்சோவில் கைது

0 511
Stalin trichy visit

திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன்(வயது 27). திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது வழிமறித்தும், செல்போனிலும் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த 9-ம் வகுப்பு மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த புருஷோத்தமனின் நண்பர்களான ராம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.