திருச்சி எட்டரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்குட்டி என்கிற இளவரசன் (வயது 29). பிரபல ரவுடியான இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்கிற ஜெகதீஸ்வரன் (27) என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவர் பணம் தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் இளவரசன் ஜெகதீசன் நெற்றியில் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெகதீசன் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இளவரசனை தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் இளவரசனை கைது செய்த சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.