அகோரி பயிற்சி பெற்று வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்ட அகோரி மணிகண்டன்

0 655
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர் அண்மையில் சுடுகாட்டில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்து ஆன்மா சாந்தி பூஜை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபோல் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனது தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை செய்தவர்.

இந்நிலையில் கொல்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் 8 வருடங்களாக அகோரி பயிற்சி பெற்று வந்த நிலையில், அவருக்கும் அகோரி குருவான மணிகண்டனுக்கும் நேற்று அதிகாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி கோலத்தில் பெண் அகோரியை மாலை மாற்றி திருமணம் செய்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.