கமலவல்லி நாச்சியார் கோயிலில் 26ம் தேதி மூலஸ்தானம் சேர்தல் சேவை

0 553
Stalin trichy visit

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஊஞ்சல் உற்சவம் வருகிற 25-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்தல். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளல்.

பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடு, இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதேபோன்று 26ம் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.