திருச்சி அருகே வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகளை பார்வையிட்ட அமைச்சர்!
திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் பகுதியில் வயல்வெளிகளில் தொடர் மழையின் காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்றும்படி பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து ஆவண செய்வதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கே எஸ் எம் கருணாநிதி ஜெர்மன் சத்யா கோவிந்தராஜ் கவுன்சிலர் பழனியப்பன் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
