ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருச்சியில் மீலாது நபி விழாவையொட்டி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் திருச்சி மரக்கடையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஏழை எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. பின்னர் நடத்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு 3½ சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். வடகிழக்கு பருவமழை நெருங்குவதால் புதிதாக கட்டப்பட்டு வரும் சத்திரம் பஸ் நிலைய பணியினை விரைந்து முடிக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.