சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது

0 325
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தாசில்தார் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், விநியோகஸ்தர்கள், வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது, குறித்த நேரத்திற்கு வீடுகளுக்கு சென்று சிலிண்டர் டெலிவரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக நுகர்வோர்களிடம் சமையல் எரிவாயு குறித்து குறைகள் கேட்டறிந்தனர். இறுதியில் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.