தி.மு.க. வேட்பாளர் மதிவாணனின் முத்தான தேர்தல் வாக்குறுதிகள்…!

0 396
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 16வது வார்டு வேட்பாளர் மதிவாணன் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் தான் வெற்றி பெற்றால் தனது வார்டுக்கு என்னென்ன திட்டங்களை செய்யவுள்ளார் என்பதை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு;-

அரியமங்கலம் பகுதி
1.முன்னூறு குடும்பத்திற்குமேல் வசித்து கொண்டிருக்கும் அரியமங்கலம் மலைப்பகுதி மக்களின் கழிவறை வசதி.
2. அஞ்ஜுமனே ஹியாமத் இஸ்லாம் நகர் பகுதியில் தற்காலிக நடைபாதை அமைப்பது. 3.தீப்பெட்டி கம்பெனி தெரு முதல் காயிதே மில்லத் நகர் சாலை சீர் அமைப்பது.
4.காயிதே மில்லத் நகர் பகுதி மக்களின் வசதிக்காக V.V.L.Pமில் ஆலையில் பேசி காம்பவுண்ட் சுவர் அகற்றுவது.
5.உயர் நிலை நீர்தேக்க தண்ணீர் தொட்டி அமைத்து தரப்படும்.
6. பள்ளிவாசல் தெரு, இக்பால் தெரு ஆகிய இரண்டு தெருக்களுக்கும் கண்கானிப்பு கேமரா பொறுத்தி தரப்டும்.
7.கலைவாண தெரு ரேசன் கடையை விரிவுபடுத்தி தரப்படும்.
8.பெண்களுக்கு மகப்பேரு மருத்துவமனை அமைத்து தரப்படும்.
9.முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.
10.பூங்கா, விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
11.ஆஞ்சிநேயர் கோயில் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் தனி பாலம் அமைத்துதரப்படும்.

விஸ்வாஸ் நகர் பகுதி
1.தரமான தார் சாலைகள் அமைத்து கொடுத்தல்.
2.தெரு மின் விளக்குகள் அதிக ஒளியுடன் (சோலார்) அமைத்துக் கொடுத்தல்.
3.கருவேல மரங்களை அப்புறப்படுத்துதல். 4. தஞ்சை கல்லறை ரோடு தார்ச்சாலை.

புதுத்தெரு பகுதி
1.குடிசை வீடு மாற்றி தரப்படும்.
2.பழைய ரோடுகள் அகற்றிவிட்டு புதிய ரோடு போடவும்.
3.இரண்டு தெரு விளக்கு இடையே புதிய தெரு விளக்கு அமைத்து தரவும்.

கலைஞர் நகர் பகுதி
1.பெரிய காரியம் நடந்தால் தண்ணீர் தூக்க வசதியில்லை என்பதால் போர்வெல் போட்டுத்தரப்படும்.
2.ஓரு படிப்பகம் கட்டிதரப்படும்.
3.மழை நேரங்களில் தண்ணீர் வீட்டிற்குள் புகுவதை தடுக்க வழிவகை செய்து தரப்படும்.
4.முன்பகுதியில் கலைஞர் பெயரில் ஆர்ச் கட்டித்தரப்படும்.
5.ஒவ்வொரு கழிப்பிடத்திலும் ஒரு போர் மோட்டார் அமைத்துத்தரப்படும்.
6.உயர் மின் கோபுரம் விலக்கு அமைத்து தரப்படும்.

வசந்தநகர் பகுதி
1. பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்துத்தரப்படும்.
2.தோப்பு தெரு வாய்க்கால் பாலம் உயர்த்தி தரப்படும்
3. வடக்கு தெரு, கிழக்க தெரு ரேசன் கடைகளை பராமரிப்பு செய்து தரப்படும்.
4. அங்கன்வாடி மையம் அமைத்து தரப்படும்.
5. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.

தோப்புதெரு பகுதி
1. பிரசவ ஆஸ்பிட்டல் ஒன்று ஏற்பாடு செய்து தரப்படும்.
2. இளைஞர்களுக்கு உடற்பயிற்சி நிலையம் அமைத்துத்தரப்படும்.
3.கலைஞர் நகர் பகுதியில் 24 இலவச வீடு ஏற்பாடு செய்து தரவும்.

மேலும் பொதுமவாக அனைத்து பகுதிக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, மின் விளக்கு வசதி மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.