திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நூலகர் தின விழா சிங்காரத்தோப்பில் உள்ள மைய நூலகத்தில் நடைபெற்றது – இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்…”தற்போது வரை செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் – அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு ( standard operating procedures) பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.மாஸ்க் அணிவது,கிருமி நாசினி பயன்படுத்துவது, குழந்தைகளை எப்படி இடைவேளை விட்டு அமர வைக்க வேண்டும் போன்ற முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். பொது சுகாதர துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம்,அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைபிடிக்க உள்ளோம்.
9,10,11,12 மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தி உள்ளனர் என்ற விபரங்களை பெற்று வருகிறோம். அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 150 மாணவர்கள் அமர்ந்து படித்து வந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்து உள்ளது எனவே மாணவர்கள் சேர்க்கைக்கு தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பை கண்டிப்பாக மேம்படுத்துவோம்.” என்றார்.