வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் ரூ.41 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் கிராம சந்தைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி, வையம்பட்டி காந்திநகர் மலை அருகில் ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 0.70 டன் அளவு கொண்ட நுண்ணுயிர் உர மையம் அமைக்கப்பட்டு வரும் பணி, நடுப்பட்டியில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, ரூ.23 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை புதுக்கோட்டை பிரிவு முதல் கல்பட்டி சத்திரம் வரை சாலை பலப்படுத்தும் பணி,


கல்பட்டியில் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகள் வழங்குதல், புதுக்கோட்டை ஊராட்சியில் புதுக்கோட்டை ரெயில்வே கேட் அருகில் உள்ள ஒன்றிய தோட்டத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் அடர்வன பழமரக்கன்றுகள் அமைக்கும் பணி ஆகியவற்றினை மாவட்ட கலெக்டர் சிவராசு பார்வையிட்டு பணிகளை தரமாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் குணசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு அண்ணாதுரை, கிஷன்சிங் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
