வருவாய்த்துறை, காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 469
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் தொட்டியம் வீரமுத்தரையர் முன்னேற்ற கழகம் சார்பில் வீரமுத்தரையர் முன்னேற்ற கழக பெயர் பலகையை அகற்ற முயன்ற தொட்டியம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வாணப்பட்டறை கார்னரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வைரவேல், கொள்கை பரப்புச்செயலாளர் தளவாய் ராஜேஷ், மத்திய மண்டல செயலாளர் குணா, மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இணை அமைப்பாளர் குமார் வரவேற்றுப் பேசினார். முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.