வருவாய் ஆய்வாளர் எனக்கூறி பண மோசடி செய்ய முயன்ற வாலிபர் கைது

0 510
Stalin trichy visit

திருச்சி தஞ்சை ரோடு வரகனேரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பாஷா(55) இவரது மகள் பெனாசிர் பாத்திமா இவரது கணவர் கடந்த ஜூன் மாதம் இறந்துள்ளார். எனவே தனது மகளின் வாழ்கைக்கு உதவி செய்ய வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பாஷாவின் வீட்டிற்கு ஒருவர் தன்னுடைய பெயர் தேவபிரசாத் என்று அறிமுகப்படுத்தி கொண்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாகவும், மேலும் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி தொகை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கல்வித்துறையில் வேலை பெற்று தருவதாக கூறியுள்ளார். பின்னர் பாஷாவின் மகளுக்கு போன் செய்து தனது வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் பணம் செலுத்துமாறு கூறினார்.

இதில் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(35) என்ற வாலிபரை கைது செய்து திருச்சி கோட்டில் ஆஜர்படுத்தினர் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார். மேலும் இதுபோன்று அரசு அலுவலகங்களின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.