குழந்தை பெற இயலாத வகையில் இரு கர்ப்பப்பை இருந்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

0 504
Stalin trichy visit

புதுக்கோட்டை மாவட்டம் மேல்இரண்டாம் வீதியில் வசிப்பவர் அப்துல் சல்மான் மகள் ரபியத்துள் பசிரிய்யா(27). இவருக்கும், பொன்னமராவதி வேந்தம்பட்டியை சேர்ந்த முகமது இப்ராஹிமின் மகன் முகமது இலியாஸ்(34) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், பசிரிய்யாவிற்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் அவரது வயிற்றில் இரு கர்ப்பப்பை இருந்ததால் அவருக்கு குழந்தை பெறும் தன்மை இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இதனை அடுத்து இலியாஸ், பசிரிய்யாவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டரை வருடங்களாக குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொராய்சிட்டியில் தனது சகோதரியின் வீட்டில் வசித்துவந்துள்ளார். இதனை அடுத்து பசிரிய்யாவின் பெற்றோர்கள் அவருக்கு மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த அவர் கடந்த 8ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பசிரிய்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.