விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 29ந் தேதி நடக்கிறது

0 492
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29.10.2021 வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டமன்றத்தில், ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை, இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.