இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக பண்ணை சான்று பெற்று பயனடையலாம்

0 605
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இயற்கை விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்பது முற்றிலும் அங்ககப் பொருட்களான இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யா போன்ற இயற்கைப் பொருள்கள் கொண்டு செய்யப்படும் விவசாய முறையாகும். இம்முறையில் ராசயனப் பொருட்களான உரங்கள், களைக்கொல்லிகள், பூச்சி நோய் மருந்துகள் மற்றும் ராசயன இடுப்பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உணவு தானியம், சிறுதானியம், பயறு, எண்ணெய் வித்துகள், கரும்பு, காய்கறி, மூலிகை பயிர்கள் மற்றும் பழங்கள் சாகுபடியில் நச்சுதன்மையில்லாத விளைபொருள்கள் உற்பத்தி செய்வதில் தமிழகத்தில் அங்ககச்சான்றளிப்பு துறை மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறது.

அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பபடிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விபர குறிப்பு 3 நகல்கள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகிய விபரங்களுடன் 3 நகல்களில் உரிய விண்ணப்பத்துடன் உரிய விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

பதிவு கட்டணம், ஆய்வு, சான்று கட்டணம், பயண நேர கட்டணம் வருடத்திற்கு சிறு, குறு விவசாயிகள் மொத்தம் ரூ.2 ஆயிரத்து 700-ம், பிற விவசாயிகள் ரூ.3 ஆயிரத்து 200, குழு ஒன்றுக்கு பதிவு செய்திட ரூ.7ஆயிரத்து 200 வணிக நிறுவனங்களுக்கு ரூ.9ஆயிரத்து 400 கட்டணம் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி, மன்னார்புரத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2420133 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.