திருவெறும்பூர் ரெயில் நிலைய பிளாட்பார்மில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

0 510
Stalin trichy visit

திருவெறும்பூரில் உள்ள ரயில் நிலைய பிளாட்பார்மில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்தார். இதை பார்த்த ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் உடனடியாக திருவெறும்பூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் பிரேதத்தை பார்வையிட்டதோடுஉடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கூத்தைப்பார் கிராம நிர்வாக அலுவலர் ராதிகாவிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்து இறந்து போன அடையாளம் தெரியாத அந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக இங்கு வந்தார்?, ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இறந்துபோன வாலிபர் வெள்ளை கலர் முழுகை சட்டையும், ஊதா மற்றும் அரக்கு நிறம் கலந்த முக்கா பேண்டும் அணிந்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.