சிங்கப்பூருக்கு தப்பி சென்ற மோசடி மன்னன் திருச்சி விமான நிலையத்தில் கைது

0 275
Stalin trichy visit

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையில், தேடப்பட்டு வரும் குற்றவாளி என ஒருவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், சிக்கியது கோவை யூனிவர் சிட்டி அஞ்சல் பாரதிநகர் காமாட்சி நகரை சேர்ந்த தியாகராஜன்(வயது 48) என்பதும், தியாகராஜன் மீது மோசடி பிரிவின் கீழ் கடந்த 2020ம் ஆண்டில் கேரளா மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து கேரளா மாநிலம் கொச்சி குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து திருச்சி வந்த கொச்சி போலீசார் தியாகராஜனை கைது செய்து கேரளா அழைத்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.