விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

0 502
Stalin trichy visit

நெய்குப்பை புதூர் அரசு விதைப் பண்ணையில் விதை சாற்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பதிவு செய்யப்பட்டுள்ள நெல் ரகங்கள் மற்றும் அதன் வயல்களை ஆய்வு செய்து கலவன்களை நீக்கி விதை பண்ணையினை சுத்தமாக வைத்து தரமான விதை நெல் உற்பத்தி செய்ய அறிவுறுத்தினார். மேலும் பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சடி சம்பா மற்றும் துர்ய மல்லி ஆகிய நெல் வயலினை பார்வையிட்டார்.

திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தார்.  பின்னர் காலவதியான விதைகள் மற்றும் தரம் குறைவான விதைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது விதை சட்ட படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆய்வின் போது திருச்சி மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வசந்தா, வேளாண்மை துணை இயக்குனர் லட்சுமணசாமி, விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் மற்றும் விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.