54-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு மாவட்ட மைய நூலகத்தில் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் வரும் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. 14-ந் தேதி காலை 11 மணிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேசிய தலைவர்கள் பற்றி ஓவியம் வரைதல் போட்டி நடைபெறும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வர வேண்டும். 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்திய விடுதலை போரில் என்னை கவர்ந்த நிகழ்வு என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும்.
பேச்சுப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். 16-ந் தேதி காலை 10.30 மணிக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும். பேச்சுப்போட்டிக்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக வழங்கப்படும். இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றியதாகும். 17-ந் தேதி காலை 11.30 மணிக்கு பார்வை குன்றியவர்களுக்கு பொதுஅறிவு தொடர்பான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெறும்.
18-ந் தேதி காலை 10.30 மணிக்கு மகளிர்க்கான பேச்சுப்போட்டி நடைபெறும். தலைப்பு இந்திய விடுதலை போரில் தமிழகத்தின் பங்கு ஒருவருக்கு 5 நிமிடம் மட்டுமே அனுமதிக்கப்படும். 20-ந் தேதி காலை 11 மணிக்கு வாசகர்களுக்கு படம் பார்த்து கதை, கவிதை, கட்டுரை எழுதும் போட்டி நடைபெறும். போட்டி நடைபெறும் நேரத்தில் படம் பார்வைக்கு வைக்கப்படும். வயது வரம்பின்றி ஆண், பெண் இருபாலரும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான கட்டுரை போட்டிக்கான தலைப்பு சுதந்திர போராட்ட வரலாற்று பக்கங்களில் திருச்சி மாவட்டம் கட்டுரை எழுதி மாவட்ட மைய நூலகம், 144 மேலரண்சாலை, சிங்காரத்தோப்பு திருச்சி-620008 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கு தேசிய நூலக வார நிறைவு விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். 54-வது தேசிய நூலக வார விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0431-2702242, 75980-93923, 94870-91122 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் சி.கண்ணம்மாள் தெரிவித்துள்ளார்.