பருவ மழையை எதிர்கொள்ள தீயணைப்புத்துறை தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி தகவல்

0 629
Stalin trichy visit

திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-
தென் மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களில் மிக கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை இயக்குனர் கரண் சின்ஹா உத்தரவின் பெயரிலும், மத்திய மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் மேற்பார்வையிலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையில் 9 நிலையங்கள் உள்ளன.

அனைத்து நிலையங்களில் உள்ள செயற் கருவிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர்நிலைகள் மற்றும் குளங்களில் குளிக்க யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. நீர் நிலைகள் குளம் குட்டைகளில் வேடிக்கை பார்க்க செல்வது செல்பி எடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்து இடங்களிலும் மக்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 20 பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்கள் உள்ளனர். அனைவரும் எந்தவிதமான அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள பயிற்சி பெற்றவர்கள். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களை மீட்க ரப்பர் மிதவை மற்றும் தற்காப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளது. மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம். பாம்புகள் ,விஷ வண்டுகள், மரங்கள் ஏதேனும் விழுந்திருந்தாள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை எண் 101 அணுகவும். மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை எண் 1077 தொடர்பு கொள்ளலாம். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை எந்த நேரமும் மக்களுக்கு சேவை செய்ய தயாரான நிலையில் உள்ளோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.