ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கு எண்ணை கேட்டு ரூ.3 லட்சம் அபேஸ்

0 573
Stalin trichy visit

திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரிவரதராஜ்(வயது 86). ஓய்வு பெற்ற பெல் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டில் லேண்ட் லைனில் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்கள் ஏ.டி.எம். கார்டு புதுப்பிப்பதற்காக பேசியுள்ளார். மேலும் அவரின் ஏ.டி.எம் கார்டு நம்பர், ஏ.டி.எம். ரகசிய எண் ஆகியவற்றை கேட்டுள்ளார். இதனை நம்பிய ஸ்ரீஹரி வரதராஜ் அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் மாயமாகி விட்டது.

இதில் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.