திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் ஒருவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்வதாக புத்தாநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சூர்யா சம்பவ இடத்திற்கு சென்று ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தம்மாநாயக்கனூரை சேர்ந்த மச்சக்காளை (வயது 60) என்பவரை கைது செய்தார்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மணப்பாறை பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.