தேசிய ஊட்டச்சத்து மாதவிழா கண்காட்சி

0 421
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதவிழா கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் தொடக்கமாக ஊட்டச்சத்து குறித்து உணவின் வகைகளான சக்தி தரும் உணவான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்கள், பாதுகாப்பு தரும் உணவான கீரை, காய், பழங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஷ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.