ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் பணம் பறித்த 2 வாலிபர்களை சுற்றிவளைத்த போலீசார்

0 488
Stalin trichy visit

திருச்சி நாகமங்கலம் காந்திநகரை சேர்ந்தவர் சின்னசங்கிலி(32). ரியல் எஸ்டேட் புரோக்கரான இவர், சம்பவத்தன்று திருச்சி அய்யப்பன்கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறிக்கொண்டு தப்பினர்.

உடனே சின்னசங்கிலி திருடன், திருடன் என்று சத்தம்போட்டுக்கொண்டே அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது அங்கு போக்குவரத்து பிரிவில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள், திருச்சி அரியமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த அஜய்(21), பாலக்கரையை காஜாபேட்டையை சேர்ந்த சேதுபதி(22) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.500, கத்தி, மோட்டார் சைக்கிளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் அஜய் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.