சமயபுரத்தில் பஞ்சப்பிரகார விழா தொடக்கம்!
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பஞ்சப்பிரகாரம் திருவிழா தொடங்கியது. முதல் நாளான நேற்று தாய் சமயபுரத்தாள் வெள்ளி

கேடயத்தில் உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.