சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க திருச்சி ஆணையரிடம் மனு!
மனிதநேய வர்த்தக நல சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதில் ..”சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் சாலையோர வியாபாரிகளுக்கு முறையான அடையாள அட்டையை வழங்க வலியுறுத்தியும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித நேய வர்த்தக நலச்சங்கத்தின் சார்பாக தொடங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பின் அடிப்படையிலும் சட்டத்துக்கு உட்பட்டு முறையான அடையாள அட்டை வழங்க வலியுறுத்தியும்
கடந்த 25 ஆண்டு காலமாக வியாபாரிகள் வியாபாரம் செய்யும் இடத்தை உறுதி செய்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் அவர்கள் உறுதி அளித்தார்கள்