அரசின் மானியத் தொகை வழங்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டார இயக்க மேலாளர் கைது

0 823
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கண்ணுடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் அவரது ஊரில் உள்ள மலர் என்ற மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக உள்ளார். இக்குழுவில் 12 விவசாய கூலி வேலை செய்யும் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவினருக்கு அரசால் தாட்கோ நிறுவனத்தின் மூலம் கறவை மாடு வாங்கி சுயதொழில் செய்வதற்காக இக்குழுவிற்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து லட்ச ரூபாய்க்கு மானிய தொகையாக இரண்டரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை பெற்று வழங்குவதற்காக மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கி வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகு என்ற அலுவலகத்தில், வட்டார இயக்க மேலாளராக பணிபுரியும் மல்லிகா என்பவர் மேற்படி ராஜலட்சுமியின் மலர் சுய உதவிக் குழுவிற்கு மானிய தொகை பெற்று தருவதற்கு 12 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே இவர்களுக்கு கடனுதவி பெற்று தர இயலும் என்று கூறியுள்ளார். வட்டார இயக்க மேலாளர் மல்லிகாவிற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத மலர் சுய உதவி குழுவின் தலைவி ராஜலட்சுமி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் பேரில் இன்று 16 8 2022 மதியம் ராஜலட்சுமியிடமிருந்து வட்டார இயக்க மேலாளர் மல்லிகா ரூபாய் 12000 லஞ்சமாக பெற்று போது கையும் காலமாக பிடிபட்டார். இந்த ஒரு மகளிர் சுய உதவி குழுவிற்கு 12 ஆயிரம் என்பது போல் மணப்பாறை ஒன்றியத்தில் மொத்தம் 980 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற ஒவ்வொரு குழுவிற்கும் தாட்கோ மூலம் வங்கி கடன் கிடைக்கும் ஒவ்வொரு குழுவினரிடமும் இதுபோல வட்டார இயக்க மேலாளர் மல்லிகா பெற்று வருகிறார் என்பதும் விசாரணையில்தெரிய வருகிறது 980 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டார இயக்க மேலாளர் மல்லிகா என்பவரை பொறுப்பாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.