திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பு முகாம்கள் மூலம் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க கடந்த 03.10.2021 அன்று திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 126 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. கோ.அபிசேகபுரம் கோட்டத்தில் நடைபெற்ற 53 முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 19 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன்படி பாண்டியன் என்பவருக்கு முதல் பரிசாக மிதிவண்டியும், சரஸ்வதி என்பவருக்கு இரண்டாவது பரிசாக பட்டுப்புடவையும், தனம், ஏஞ்சலின் ஆகியோருக்கு 3ம் பரிசாக மினி ஹாட் பாக்ஸ், ஆர்த்தி, குருராஜ், கலா, பிரேமலதா, சாமுண்டீஸ்வரி, நோயல் ஜேசு, அரவிந்த், புஷ்பா, ரமேஷ், வசந்தி, பாரதி, மணிவேல், சுரேஷ்குமார், சத்யா, செல்வராஜ் ஆகியோருக்கு 4ம் பரிசாக ரூ.ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.