காதலிக்க மறுத்ததால் மாணவர் ஆத்திரம் : குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவி கொலை

0 2,380
Stalin trichy visit

திருவெறும்பூர் மே 23 திருவெறும்பூர் அருகே கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்பட்ட மாணவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் வித்யா லட்சுமி (19) இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் வித்யா லெட்சுமி பெல் பகுதியில் உள்ள மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிக்கு தினமும் சென்று வந்து உள்ளார்

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு காரணமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வித்யாலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வித்யா லட்சுமியின் வயிற்றில் விஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவமனை நிர்வாகம் பெல் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் பெல் போலீசார் மருத்துவமனைக்கு சென்று வித்யாலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பெல் போலீசாரிடம் வித்யா லட்சுமி கடந்த ஒரு மாத காலமாக தந்தை ஒருவன் பின்பு வந்து வந்ததாகவும் இந்த நிலையில் 11ம் தேதி கல்லூரி முடித்துவீட்டிற்கு வந்த பொழுது அட அந்த நபர் தன்னிடம் காதலிப்பதாக கூறியதாகவும் அதனால் அவரை தான் செருப்பால் அடித்து விட்டதாகவும் இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வித்யா லட்சுமி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற பொழுது காதலிப்பதாக கூறி வித்யா லெட்சுமியிடம் செருப்படி பட்ட ஒருவன் உட்பட அடையாளம் தெரியாத 3 வாலிபர்கள் வித்யா லெட்சுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அருகில் உள்ள ஒரு சந்தில் வைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக கூறியதோடு

இதில் பாதிக்கப்பட்ட வித்யாலட்சுமி கடந்த 13ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், பின்னர் வெளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வித்யாலட்சுமி வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு அதிகமாகவும் கடந்த 17ஆம் தேதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெல் போலீசார் இச்சம்பவம் .குறித்து மர்ம நபர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்த நிலையில் ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வித்யா லட்சுமி தனியார் மருத்துவமனையில் இருந்து 21ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த வித்யாலட்சுமி சிகிச்சைக்கு பலனில்லாமல் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் பிடித்து பெல் போலீசார் விசாரணை செய்தால் மட்டுமே வித்யா லட்சுமியின் மரணத்திற்கு உரிய விடை தெரியும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.