திருச்சி தில்லை நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின்(வயது 19). திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய தந்தை சிவானந்தம் இலங்கையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அஸ்வின் கல்லூரியில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட கல்லூரி நிர்வாகம் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.