பள்ளி மாணவி மாயம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சேனிய கள்ளி குடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். வெங்கடேசன் சமையல் வேலைக்காக வெளியில் சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த பொழுது மகளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.