திருநங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல்; திருநங்கைகள் ஒன்று கூடியதால் பரபரப்பு!
திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய பஸ் நிலையத்தில் உள்ள திருநங்கைகளும் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே மத்திய பஸ் நிலையத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அனைவரும் அந்த பெட்ரோல் பங்க் முன்பு ஒன்றுகூடினர். இதில் அரியமங்கலத்தில் சேர்ந்த திருநங்கைகள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனே உதவி கமிஷனர் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.