புகைபிடிக்கும் பழக்கத்தை விடமுடியாததால் டிராவல்ஸ் நிறுவனர் தற்கொலை

0 328
Stalin trichy visit

திருச்சி கே.கே. நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகே உள்ள கேசவன் நகரைச் சேர்ந்தவர் கதிரேசன் (58). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கதிரேசன் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவரை புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறி இருக்கிறார்கள்.

ஆனாலும் கதிரேசன் தனது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டபாடில்லை. அவரது உடல்நலம் கருதி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவர் புகை பிடிப்பதை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கண்டித்ததால் வேதனையடைந்த கதிரேசன், வீட்டின் மின் விசிறி கொக்கியில் கயிற்றால் தூக்கில் தொங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே கதிரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கே.கே. நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.