திருச்சி ஏர்போர்ட் இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 62). இவர் கே.கே.நகரில் இருந்து உடையாம்பட்டி சாலையில் ராமலிங்கம்(வயது 48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குறிஞ்சி நகர் ஜங்சன் பகுதி அருகே வந்த போது சாலையின் நடுவே மாடு குறுக்கே வந்தது. இதில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மாடு மீது மோதியது.
இதில் இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.