திருச்சி காட்டூர் திருநகர் பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவர், அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் அரசால் மக்களுக்கு இலவசமாக வழங்கபடும் பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக லாபம் பெறும் நோக்கத்தில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை கடந்த 6ந் தேதி திருச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கைதான இஸ்மாயிலிடம் இருந்து 4,300 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இஸ்மாயில் தொடர்ந்து இதே போன்ற ரேஷன் அரிசியை பதுக்கி கடத்தும் குற்ற செயலில் ஈடுப்படுவதால், அவரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார். அதை போலீஸ் கமிஷனர் ஏற்று, இஸ்மாயிலை கள்ளசந்தை தடுப்பு காவல் சட்டத்தின் படி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டார்.