வெள்ளிக்கிழமை தான் திருச்சியில தியேட்டர் திறக்குறாங்களாம்!

0 436
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று அதிகரித்ததன் காரணமாக பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு 23-ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 50% இருக்கைகளும், சமூக இடைவேளையை பின்பற்றி பார்வையாளர்கள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் புதுப்படங்கள் ஏதும் வெளி வராத காரணத்தினாலும்,பார்வையாளர்கள் குறைவாக மட்டுமே வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு திருச்சியில் உள்ள பெரும்பாலான திரையரங்குள் நேற்று திறக்கப்படவில்லை.

அண்ணா சிலையில் உள்ள ரம்பா,ஊர்வசி – ஜங்கசனில் உள்ள சோனா,மீனா – தெப்பக்குளம் எல்.ஏ சினிமாஸ் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் அனைத்தும் நேற்று பூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தெருவில் உள்ள அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA

Leave A Reply

Your email address will not be published.