திருச்சியில் 2.35 லட்சம் குழந்தைகளுக்கு இன்று சொட்டுமருந்து செல்ல இலக்கு; கலெக்டர் தகவல்
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பெரிய மிளகுபாறையில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், 1569 மையங்களில் திருச்சி மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
2 லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று சொட்டு மருந்து வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவில் மசூதி சர்ச், பேருந்து நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலா தளங்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் போலியோ முற்றிலும் ஒழிப்பதற்கு காரணம் பொதுமக்கள் மற்றும் தாய்மார்களின் ஒத்துழைப்பு தான். எனவே தாய்மார்கள் கண்டிப்பாக இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனோ 4 வது அலை ஜூன் மாதத்தில் வரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கட்டாயமாக பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.