திருவெறும்பூர் பெல் தொழிற்சாலை முன்பு தொழிற்சங்கங்கள் உண்ணாவிரத போராட்டம்

0 548
Stalin trichy visit

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் தொழிற்சாலை மெயின் கேட் முன்பு தொழிற்சங்கங்கள் சார்பில் சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தி லாபத்தில் நிறைவு செய்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் திருவெறும்பூர் அருகே உள்ளது இந்த நிறுவனம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிர்வாகம் ஜே.சி.எம் தேதியை உடனே அறிவிக்க வேண்டும். சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தியை லாபத்தில் நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெல் மெயின் கேட் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு பெல் ஐஎன்டியுசி தொழிற்சங்க பொதுச்செயலாளர் அந்தோணி அலெக்சிஸ் திரவியம் தலைமை வகித்தார் என்டிஎல்எப் பொதுச் செயலாளர் உத்திராபதி, பிசிஇயூ பொதுச் செயலாளர் மணிமாறன், எல் எல் எப் பொதுச் செயலாளர் லட்சுமணன், டாக்டர் அம்பேத்கார் யூனியன் பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் பெல் மெயின்கேட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.