தமிழக காவல் துறை சார்பாக காவல் நிலையங்களில் பெண்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்துக்கான 181 அழைப்பில் நேற்று மஞ்சம்பட்டி சேர்ந்த லூயிஸ் மேரி என்பவர் தொடர்பு கொண்டு தனது கணவர் மரிய தங்கராஜ் தனது குழந்தைகளையும் கவனிக்காமல் வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக பெண் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் தலைமை காவலர் உமாமகேஸ்வரி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கணவரை காவல் நிலையம் அழைத்து உரிய அறிவுரை கூறி, போலீசார் மனைவி குழந்தையை அவருடன் அனுப்பி வைத்தனர். இதன்மூலம் பெண்கள் உதவி மைய 181 அழைப்பின் மூலம் புகார் அளித்த பெண்ணுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஏற்படுத்திய மகளிர் போலீசார் நடவடிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது