திருச்சியில் உலக தன்னார்வலர்கள் தினம் கொண்டாட்டம்…!
உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பிப்ரவரி 27 உலக என்ஜிஓ (World NGO DAY) தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக தன்னார்வ தொண்டு நிறுவனம் அனைத்து அரசு சாரா மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களையும், ஆண்டு முழுவதும் சமூகத்திற்குப் பங்களிக்கும் அவர்களுக்குப் பின்னால் உள்ள மக்களையும் அங்கீகரித்து,
கொண்டாடி, கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும். அரசு சாரா நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் செயல்படுகின்றன.
அரசு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களை அங்கீகரிப்பது, கொண்டாடுவது மற்றும் கௌரவிப்பது மற்றும் சமூகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவதில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் பங்களிக்கும் சர்வதேச தினமாகும்.

திருச்சி கோபால் தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தில் ஜித் சி ஷா (Ditjit CShah) சார்பில் கிராமாலயா “பத்மஸ்ரீ” எஸ்.தாமோதரன், அன்பாலயம் செந்தில்குமார், தண்ணீர் அமைப்பு கே.சி.நீலமேகம் மற்றும் முசிறி திண்ணக் கோணம் நாட்டு
விதை யோகநாதன் ஆகியோரை அழைத்து உலக என்.ஜி.ஒ. தினத்தை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி திருச்சியில் சிறப்பான தன்னார்வலர்கள் என கௌரவிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்விற்கு சிவக்குமார், செந்தில், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.