டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

0 282
Stalin trichy visit

திருச்சி குழுமணி கடை வீதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 58). பொன்மலைப்பட்டி புதுப்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி பொன்மலைப்பட்டி பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த பொன்மலை தங்கேஸ்வரி நகர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி என்கிற காக்கா கார்த்தி (25) என்பவர் நடராஜனிடம் ரூ.5000 பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

நடராஜன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளை அடித்து நொறுக்கி உள்ளார். இதுகுறித்து நடராஜன் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பணம் கேட்டு மிரட்டல், பொது சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய இரண்டு வழக்குகளில் கார்த்தி என்கிற காக்கா கார்த்தி மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.