சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் சிமெண்ட லோடு ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவராமகிருஷ்ணன்.இவர் அரியலூர் சிமென்ட் ஆலையிலிருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திவிட்டு உணவு அருந்தச் சென்றார். பின்னர் லாரியை எடுக்கும் போது சாலையின் ஓரத்தில் இருந்த மேடு பள்ளத்தால் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்..
இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.