போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து விழிப்புணர்வு!

0 304
Stalin trichy visit

தமிழகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 27.02.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் தங்களின் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக பேரணி மேற்கொண்டனர்.
மேலும் போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவத்தையும் போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.