சேற்றில் சிக்கிய பசுமாட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே செம்பியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செபஸ்டியன் மகன் ஸ்டீபன். விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்குப்போன பசுமாடு அங்கு உள்ள ஏரியில் தண்ணீர் குடிக்கும்போது 15 அடி ஆழ சேற்றில் பசுமாடு சிக்கிக்கொண்டது. பசுமாட்டை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபண்ணா அவர்கள் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி வீரர்கள் திராவிடன், ரமேஷ் குமார், பழனிச்சாமி ஆகியோருடன் சென்று சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். இந்த மாட்டின் மதிப்பு சுமார் ரூ.50,000 இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் பசு மாட்டினை உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர்.