மருந்து வாங்கிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தியதால் கொலை மிரட்டல்

0 263
Stalin trichy visit

திருச்சி தில்லை நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் தில்லைநகர் 10-வது குறுக்குத் தெருவில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவர் சென்னையில் உள்ள 2 மருந்து கம்பெனிகளுக்கு டீலராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் வெள்ளாள பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் சோமானி, இவரது தந்தை ஸ்ரீ பகவான் சோமானி இருவரும் மருந்து விற்பனை ஸ்டாக்கிஸ்டாக உள்ளனர். இவர்கள் அசோக்குமாரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பல்வேறு தவணையாக ரூ.23 லட்சத்து 17 ஆயிரத்து 160-க்கு மருந்து கொள்முதல் செய்தனர்.

பணத்தை 15 நாட்களுக்குள் தருவதாக கூறினார். ஆனால் மருந்து வாங்கிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து அசோக்குமார் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.